மேடன் துப்பாக்கிச் சுடுதல் கோப்பை ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் தனிநபருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா பங்கேற்றார்.
இதில், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 251.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான அஞ்சும் மோட்கில் 229 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.