தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இறுதிச்சுற்று ஆட்டத்தில், இருமுறை ஸ்னூக்கர் உலக சாம்பியனான பங்கஜ் அத்வானி, ஆதித்யா மேத்தாவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதித்யா மேத்தா 6-2 என்ற செட்கணக்கில் பங்கஜ் அத்வானியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இது குறித்து மேத்தா கூறுகையில், இந்த சாம்பியன்ஷிப் பட்டமானது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நான் இதனை இன்று பெறுகிறேன். மேலும் காயத்திலிருந்து மீண்டு தற்போது இந்த சாம்பியன்ஷிப்பை வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இதேபோல் இன்று நடைபெற்ற மகளிர் இறுதிச்சுற்று ஆட்டத்தில், கர்நாடகாவின் வித்யா பிள்ளை 3-2 என்ற செட்கணக்கில் மத்திய பிரதேசத்தின் அமீ காமனியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதையும் படிங்க: வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை!