தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரான்ஸ் 2-வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி: மொராக்கோவின் முயற்சி கடைசியில் தோல்வி

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி
பிரான்ஸ் 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி

By

Published : Dec 16, 2022, 1:11 PM IST

தோகா: அல்பேத் மைதானத்தில் நேற்று (டிச.15) நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், முன்னணி அணிகளை வீழ்த்திய மொராக்கோ அணியும் மோதின. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்த அணிகள் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியது.

இந்த போட்டியில் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் பிரான்சும், உலகக்கோப்பை அரையிறுதிக்கு முதன்முதலாக முன்னேறிய மொராக்கோவும் களமிறங்கியது.

மொராக்கோ சாதனையை முறியடிக்க செய்யும் வகையில் ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோல் அடித்தார். பிரான்ஸ் அணியின் வேகம் மேலும் அதிகரித்தது. இதனிடையே 17-வது நிமிடத்தில் ஜூருட்க்கு கோல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் 36-வது நிமிடத்தில் செளமேனி அபார ஆட்டத்தால் மீண்டும் ஜீரூட்க்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் அவர் தவறவிட்டார்.

மொராக்கோ அணி வேகமெடுக்க தொடங்கியது. ஒவ்வொரு முறையும் ரைட் விங்கில் மொராக்கோ பாய்ந்தபோது கார்னர் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்ததும், கோல் அடிக்க எடுத்த வாய்ப்பை கடைசி நொடியில் பிரான்ஸ் கோல்கீப்பர் லூரிஸ் தடுத்துவிட்டார். முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் எந்த நேரத்திலும் மொராக்கோ அணிக்கு கோல் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக 79-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் எம்பாப்பே 5 வீரர்களுக்கு நடுவே கொடுத்த மேஜிக்கல் பாஸை, இளம் வீரர் முவானி கோல் அடிக்க, இந்த கோல் மூலம் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பின்னர் மொராக்கோ அணி வீரர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி மொராக்கோவை வீழ்த்தியது. உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரான்ஸ் முன்னேறியது.

இறுதிப்போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி விளையாட உள்ளது. நட்சத்திர வீரர்களான மெஸ்சி மற்றும் எம்பாப்பே நேரடியாக மோத உள்ளனர். உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி நடக்க உள்ளது.

இதையும் படிங்க: எனக்கு கரு நாக்கு, வெளியே நீட்டி காட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ABOUT THE AUTHOR

...view details