தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உடற்பயிற்சி மந்திரத்தை பகிர்ந்த மேரி கோம்! - COVID-19 crisis

கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்கவும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது உடற்பயிற்சி மந்திரத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Mary Kom shares her fitness mantra to inspire people to stay fit amid COVID-19 crisis
Mary Kom shares her fitness mantra to inspire people to stay fit amid COVID-19 crisis

By

Published : Apr 28, 2020, 10:27 AM IST

உலங்கெங்கிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை இப்பெருந்தொற்றிற்கு உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியத்துடனும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் தனது உடல் ஆரோக்கியத்திற்கான மந்திரத்தை வெளியிட்டுள்ளார் இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடற்பயிற்சி, நன்றாக சாப்பிடுதல், பொறுமையாக இருத்தல். இதனை செய்தாலே உங்களது உடல் உங்களுக்கான வெகுமதியை அளிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையாக வலம் வரும் மேரி கோம், ஆறு முறை உலகச்சாம்பியன் பட்டத்தையும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனாவுக்கு நிதி: ஐபிஎல் கிட்களை ஏலத்தில் விடும் கோலி, வில்லியர்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details