டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுடன் இன்ஸ்டாகிராமில் நீண்டகாலத் திட்டம் குறித்து பேசிய அவர், "நான் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றபோது பதக்கம் வெல்லக்கூடிய திறமையான வீரர்கள் மிக குறைந்த அளவில் மட்டுமே இருந்தனர்.
2028 ஒலிம்பிக்கில் இந்தியா டாப் 10 இடத்திற்குள் வரும் - கிரண் ரிஜிஜூ நம்பிக்கை - கிரண் ரிஜிஜு
2028 ஒலிம்பிக் போட்டியில் டாப் 10 பட்டியலில் இந்தியா இடம் பிடிப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாரிஸில் நடைபெறவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டியில் அதிகமான பதக்கம் வெல்வது குறுகிய காலத் திட்டம்தான். ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள 2028 ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களை பிடிப்பதுதான் எனது பெரிய இலக்காகும்.
அதை நான் ஒன்றும் பேச்சுக்கு சொல்லவில்லை. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. தற்போதைய ஜூனியர் தடகள வீரர்கள்தான் எதிர்கால சாம்பியன்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனது வார்த்தையைக் குறித்துக்கொள்ளுங்கள் நிச்சயம் இந்தியா 2028 ஒலிம்பிக் போட்டியில் டாப் 10 இடத்தை பிடிக்கும்" எனத் தெரிவித்தார்.