2019ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் க்ரூவ் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இதில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கலத்தை வென்றார். இதன்மூலம் இந்திய வீரர்கள் சரத், மாரியப்பன் தங்கவேலு ஆகிய இருவரும் அடுத்தாண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.