தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சீனியர் ஜூனியர் இரு பிரிவுகளிலும் தங்கம் வென்ற மனு பக்கர்! - துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பக்கரின் சாதனைகள்

போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர், ஜூனியர் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இளம் வீராங்களை மனு பக்கர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

Manu Bhaker
Manu Bhaker

By

Published : Dec 24, 2019, 8:17 PM IST

63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக போபாலில் நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் ஜூனியர் மகளிர் தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இளம் நட்சத்திர வீராங்கனை மனு பக்கர் 241.5 புள்ளிகளை எடுத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

ஜூனியர் பிரிவில் மட்டுமின்றி, சீனியர் மகளிர் பிரிவிலும் பங்கேற்ற இவர், 243 புள்ளிகளுடன் 243 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இவரைத் தொடர்ந்து 237.8 புள்ளிகள் பெற்ற தேவான்ஷி தாமா வெள்ளிப்பதக்கமும் 217.7 புள்ளிகளுடன் யஷஷ்வினி சிங் தேஷ்வால் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்திலிருக்கும் மனு பக்கர் முன்னதாக ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது. 17 வயதான இவர் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க:துப்பாக்கி சுடுதலில் புதிய உலக சாதனைப் படைத்த மனு பாக்கர்!

ABOUT THE AUTHOR

...view details