உலக துப்பாகி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு, இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனையான மனு பாக்கர் பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மனு பாக்கர் 244.7 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலம் 17 வயதே ஆன மனு பாக்கர் உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிரிவில் அதிக புள்ளிகள் எடுத்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.