ரஷ்யாவின் உலான் உதே நகரில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில், ஹரியானாவைச் சேர்ந்த 20 வயது இளம் வீராங்கனை மஞ்சு ராணி முதல்முறையாக பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
#AIBAWOMENSBOXINGCHAMPIONSHIP2019: மஞ்சு ராணிக்கு வெள்ளி! - உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Manju Rani
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர், ரஷ்யாவின் எகாட்டரினாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மஞ்சு ராணி 1-4 என்ற கணக்கில் தோல்வியுற்றதால், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
முன்னதாக, இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம், ஜமுனா போரா, லோவ்லினா பார்கோஹைன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.