ஹாங்சோ (சீனா): ராணி மற்றும் பாபு ஆகிய இருவருமே ஆடவர் மற்றும் மகளிருக்கான பிரிவில் தேசிய அளவிலான சாதனையை பெற்றுள்ளனர். இருவரும் இணைந்து 5 மணி 51 நிமிடம் 14 விநாடிகளில் சீனா (5:16:41) மற்றும் ஜப்பானுக்கு (5:22:11) அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்று உள்ளனர். இந்த 35 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் பதக்கம் வென்றவர்களைத் தீர்மானிக்க இரு வீரர்களின் நேரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 35 கிலோ மீட்டர் நடை ஓட்டம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விளையாட்டு 2024-இல் பாரிஸ்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடை ஓட்டப்போட்டி இந்தியாவில் இரு வருடங்களுக்கு முன்னர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
பாபு ஆண்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில் 2:42:11 மணி அளவில் நான்காவது இடத்தையும், பெண்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் ராணி 3:09:03 மணி அளவில் ஆறாவது இடத்தையும் பெற்று உள்ளனர். மேலும், பாபு இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆண்களுக்கான 35 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் 2:29:56 மணி அளவில் தேசிய சாதனையைக் கடந்தார்.