கோலாலம்பூர் (மலேசியா):மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இன்று (ஜூலை 7) நடந்த போட்டியில் சீன வீராங்கனை ஜாங் யிமானை வீழ்த்தி இந்தியாவின் பி.வி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், பி.வி சிந்து சீன வீராங்கனை ஜாங் யிமானை எதிர்கொண்டார். 28 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-10 என்ற நேர்செட் கணக்கில் சீன வீராங்கனையை தோற்கடித்தார். இதன் மூலம் சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.