இந்தியாவில் குத்துச்சண்டை போட்டியில் கோலோச்சி இருப்பவர் மேரி கோம். மணிப்பூரைச் சேர்ந்த 36 வயதான இவர் உலக குத்துச்சண்டை தொடரில் (51 கி.கி பிரிவில்) இதுவரை ஆறு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே தனது ஒரே குறிக்கோள் என அவர் தொடர்ந்து பலமுறை தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் ஜோர்டானில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று, டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார். இதனிடையே, வரும் ஜூலை 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறவிருந்த 32ஆவது ஒலிம்பிக் போட்டி கரோனா வைரஸ் காரணமாக அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஒலிம்பிக் போட்டிதான் மேரி கோம் பங்கேற்கும் இறுதி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர் இம்முறை தனது கடைசி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசிய அவர்,