2018-19ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் நடைபெற்றன.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! - stadium
சேலம்: ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
salem sports
இந்த போட்டியில் சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் கபடி, கைப்பந்து, வளைப்பந்து , ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்த இந்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ள மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.