தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா: எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட சர்வதேச குத்துச்சண்டை வீரர்!

சித்ரதுர்கா: கோவிட்-19 பெருந்தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த சர்வதேச குத்துச்சண்டை வீரர் ரஃபிக் ஹோலி (Rafeeq Holi) எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Lockdown Effect....International wrestler simple marriage
Lockdown Effect....International wrestler simple marriage

By

Published : Apr 23, 2020, 2:37 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கர்நாடக மாநிலத்தில் இதுவரை 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 17 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மே 3ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு அம்மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு வீரராக அறியப்படுபவர் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ரஃபிக் ஹோலி. இவருக்கும் ஹீனா கவுசர் (Heena Kausar) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தகுந்த இடைவெளியைக் கருத்தில்கொண்டு அரசு நடைமுறைகளைப் பின்பற்றி, இந்தத் தம்பதியரின் திருமணம் ஹீனா கவுசரின் சொந்த கிராமத்தில் எளிய முறையில் நடைபெற்றது.

எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட சர்வதேச குத்துச்சண்டை வீரர்

இத்திருமணம் குறித்து ரஃபிக் கூறுகையில், "நாடு முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசு அறிவுறுத்தலைப் பின்பற்றியும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் எங்களது திருமணம் சித்ரதுர்காவில் நடைபெற்றது. மேலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

அரசின் அறிவுறுத்தலை ஏற்று, சர்வதேச குத்துச்சண்டை வீரர் தனது திருமணத்தை எளிய முறையில் நடத்தியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுதுள்ளது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: ரஹிமைத் தொடர்ந்து பேட்டை ஏலத்தில் விற்கும் ஷாகிப்!

ABOUT THE AUTHOR

...view details