தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உருக்கமான பதிவின் மூலம் திருமண வாழ்த்து கூறிய பிரைன்ட்டின் மனைவி! - உலக கூடைப்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக வலம்வந்தவர் கோபி பிரைன்ட்

மறைந்த கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரைன்ட்டின் மனைவி வனேசா பிரைன்ட் தம்பதியரின் 19ஆவது திருமண விழாவை முன்னிட்டு, அவருக்கு உருக்கமான அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

Late NBA legend Kobe Bryant's wife Vanessa shares heartbreaking social media post on wedding anniversary
Late NBA legend Kobe Bryant's wife Vanessa shares heartbreaking social media post on wedding anniversary

By

Published : Apr 20, 2020, 12:30 AM IST

உலக கூடைப்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக வலம் வந்தவர் கோபி பிரைன்ட். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது மகள் ஜியானாவுடன் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது, எதிர்பாராதவிதமாக நடைபெற்ற விபத்தில் பிரைன்ட், அவரது மகள் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரைன்ட்டின் மனைவி வனேசா பிரைன்ட், தங்களது 19ஆம் ஆண்டு திருமண விழாவை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உருக்கமான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

வனேசாவின் இன்ஸ்டா பதிவில், 'என் ராஜா, என் இதயம், என் சிறந்த நண்பர். இனிய 19ஆவது திருமண ஆண்டு வாழ்த்துகள் பேபி. நான் உங்களை மிகவும் இழந்து தவிக்கிறேன். என்னை உங்கள் கைகளில் பிடிக்க நீங்கள் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஐ லவ் யூ' எனப் பதிவிட்டுள்ளார்.

வனேசாவின் இன்ஸ்டா பதிவு

வனேசா பிரைன்ட்டின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு, கோபி பிரைன்ட் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரையும் கவலையடையச்செய்துள்ளது.

இதையும் படிங்க:ஒரு ரசிகனாக அவரை டி20 உலக்கோப்பைத் தொடரில் காணவிரும்புகிறேன் - ஸ்ரீகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details