தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: பி.யூ.சித்ரா தங்கம்! - Dutee Chand

தோகா: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பி.யூ சித்ரா தங்கப்பதக்கம் வென்றார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: பி.யூ.சித்ரா தங்கம்!

By

Published : Apr 24, 2019, 11:31 PM IST

23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் கத்தாரின் தோகா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் பிரிவு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பி.யூ. சித்ரா 4 நிமிடம் 14.56 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து, பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த டிகெஸ்ட் கஷா (Tigest Gashaw) வெள்ளிப்பதக்கமும், அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான முட்டில் வின்ஃபிரெட் யவி (Mutile Winfred Yavi) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதன் மூலம், இந்தத் தொடரில் இந்தியாவுக்கான மூன்றாவது தங்கப்பதக்கத்தை பி.யூ சித்ரா பெற்றுத் தந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details