தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோபி பிரைன்ட் துண்டிற்கு இவ்வளவு மதிப்பா? - வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் - பிரைன்ட் கடைசியாகப் பயன்படுத்திய துண்டு

மறைந்த கூடைப்பந்து நட்சத்திரம் கோபி பிரைன்ட் கடைசியாகப் பயன்படுத்திய துண்டு, இன்று நடைபெற்ற ஏலத்தில் 33 ஆயிரம் டாலருக்கு விலைபோகியுள்ளது.

Kobe Bryant's towel from finale sold for $33,000
Kobe Bryant's towel from finale sold for $33,000

By

Published : Mar 30, 2020, 11:50 AM IST

உலக கூடைப்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக வலம்வந்தவர் கோபி பிரைன்ட். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது மகள் ஜியானாவுடன் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது, எதிர்பாராதவிதமாக நடைபெற்ற விபத்தில் பிரைன்ட், அவரது மகள் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இச்சம்வத்தால், பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் பயன்படுத்திய பொருள்கள் இணையவழி ஏலம் (virtual auction) விடப்பட்டது.

இதில் கோபி பிரைன்ட் கடைசியாகப் பயன்படுத்திய துண்டு ஏலத்திற்கு வந்தது. அதனை சுமார் 33,077 டாலர்களுக்கு டேவிட் கோலர் (David Kohler) என்ற பழம்பொருள்கள் சேகரிப்பாளர் ஏலத்தில் எடுத்தார். இதன் இந்திய மதிப்பு சுமார், 24 லட்சத்து 91 ஆயிரத்து 773 ரூபாய் ஆகும்.

இதற்கு முன்னதாக கோலர், கடந்த மாதம் கோபி பிரைன்ட் கையொப்பமிட்ட நடுநிலைப்பள்ளி புத்தகத்தை இதேபோல் 30,000 டாலருக்கு ஏலத்தில் எடுத்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:கோவிட் 19 வைரஸ்: 16 வயது இந்திய வீராங்கனை ஒரு லட்சம் நிதியுதவி!

ABOUT THE AUTHOR

...view details