தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கரோனா - மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ

டெல்லி: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Kiren Rijiju
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ

By

Published : Apr 18, 2021, 11:40 AM IST

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் கிரண் ரிஜிஜு, "மீண்டும் கோவிட் பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்றுள்ளேன். தற்போது உடல்ரீதியாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

சமீப காலமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொண்டு, தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2.34 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதிகபட்ச எண்ணிக்கை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆயிரத்து 300 நபர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'இன்னும் ஒரு வாரத்தில் உடல் தகுதி பெறுவேன்' - வில்லியம்சன் நம்பிக்கை

ABOUT THE AUTHOR

...view details