இந்திய ஹாக்கி அணியின் முன்னோடி தயான் சந்த் பிறந்த நாளை கவுரவிக்கும் விதாமாக மத்திய அரசு 2012ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது. மேலும், இந்த தினத்தில் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜூனா, தயான்சந்த், துரோணாச்சாரியா ஆகிய விருதுகளை வழங்கியும் கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், தயான் சந்த்தின் 115ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக, இந்தாண்டின் தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகையை உயர்த்துவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்தார்.