அரியலூரில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த கராத்தே போட்டியில் தாண்டி குதித்தல், நெருப்பு வளையத்திற்குள் தாண்டுதல், பற்றி எரியும் நெருப்புடன் கூடிய ஓடுகளை உடைத்தல், கைகளில் வாகன சக்கரங்களை ஏற்றுவது உள்ளிட்ட மன உறுதியை நிரூபிக்கும் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மஞ்சள், பச்சை, நீலம், பிரவுன் மற்றும் கருப்பு நிறத்திலான பெல்ட்டுகள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களுடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கராத்தேவில் கலக்கும் மாணவர்கள் மேலும் இந்தப் போட்டிகள் குறித்து பேசிய பயிற்சியாளர்கள், தற்காப்பு கலையான கராத்தே பயிற்சிகளை கற்றுக்கொள்ள இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் வருவது உற்சாசத்தை அளிப்பதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிலம்பாட்டத்தில் மிரட்டிய பள்ளி மாணவர்கள்!