ஹாங்சோ : ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இந்திய கலப்பு இரட்டையர் அணி தங்கப் பதக்கம் வென்றது. 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஜோதி வென்னம், ஓஜாஸ் டியோடேல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். முன்னதாக தகுதிச் சுற்றில் தென் கொரியாவின் சோ சாவ்வொன், ஜூ ஜாஹூன் ஜோடி இந்திய இணை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 159க்கு 158 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று ஆசிய வில்வித்தையின் அதிகபட்ச சாதனையை சமன் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த பதக்க பட்டியலில், இந்திய அணியின் பதக்க எண்ணிககி 71ஆக அதிகரித்து உள்ளது. இந்திய அணி இதுவரை 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.