செர்பிய நாட்டில் மூன்றாவது ஜுனியர் நேஷன்ஸ் குத்துசண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இருபது நாடுகளுக்கு மேல் பங்கேற்றன. இதில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டது.
#JNC: 11 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!
செர்பியா: ஜூனியர் நேஷன்ஸ் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 3 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
indian boxing
இந்தப் போட்டிகளில் இந்திய அணியின் ஆண்கள் பிரிவில் பங்கேற்றவர்கள் 3 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 11 பதக்கங்களை வெண்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஜூனியர் நேஷன்ஸ்கோப்பை குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய ஆண்கள் அணி 11 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.