கோலாலம்பூர்: ஜூனியர் ஹாக்கியின் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில், இந்திய அணி 'சி' பிரிவில் உள்ளது.
லீக் சுற்றின் முடிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி நேற்றைய முன்தினம் (டிச.12) நெதர்லாந்து அணியுடன் மோதியது. இதில், இந்திய அணி 3-4 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், இன்று (டிச.12) நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய அணி - ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் கோலை ஜெர்மனி வீரர் ஹாஸ்பாக் பென் அடித்தார். அதன்பின் ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் இந்திய வீரரான சிர்மகோ சுதீப் கோல் அடிக்க, முதல் கால் மணி நேரத்தில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையிலிருந்தது.