மலேசியா: ஜூனியர் ஆடவர் ஹாக்கியின் 13வது உலகக் கோப்பை தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்று உள்ளது. இந்த குருப்பில் இந்திய, கனடா, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் உள்ளன.
இந்நிலையில், இந்திய தனது முதல் போட்டியாக தென் கொரியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் அரிஜித் சிங் ஹண்டால் 11, 16 மற்றும் 41வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார். மேலும், ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் அமந்தீப் மற்றொரு கோல் அடித்தார்.
எதிர்த்து ஆடிய தென் கொரியா அணி சார்பில் டோஹ்யுன் லிம் 38வது நிமிடத்திலும், மின்க்வோன் கிம் 45வது நிமிடத்திலும், கோல் அடித்தனர். இறுதி வரை போராடியும் தென் கொரியாவால் இந்திய அணியின் கோல் கணக்கை முறியடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஜூனியர் உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கி இந்திய ஹாக்கி அணி தனது 2வது போட்டியில் வரும் 7ஆம் தேதி ஸ்பெயினுடன் விளையாடுகிறது.
இதையும் படிங்க:"ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் வேண்டுகோள்!