கோலாலம்பூர்: ஜூனியர் ஹாக்கியின் 13வது உலகக் கோப்பை தொடர் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பங்கேற்றுள்ளன. இதில் இந்திய அணி 'சி' பிரிவில் உள்ளது.
லீக் சுற்றில் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 போட்டி என 3 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதில் ஸ்பெயின் அணியிடம் மட்டும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. லீக் சுற்றின் முடிவில் ஸ்பெயின் அணி முதல் இடத்தையும், இந்திய அணி 2வது இடத்தையும் பிடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று (டிச.12) நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய அணி - நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் 5வது நிமிடமே நெதர்லாந்து அணியின் வீரர் போயர்ஸ் டிமோ கோல் அடித்து கணக்கை தொடங்கி வைக்க, இதைத்தொடர்ந்து மற்றொரு கோலை வென் டர் ஹய்தின் 16வது நிமிடத்தில் அடித்தார்.