பி.எஸ்.ஏ. உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் எகிப்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா சார்பில் களமிறங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, இரண்டாவது சுற்றில் ஹாங்காங் வீராங்கனை ஹோ ட்சே-லேக் உடன் மோதினார்.
உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா - உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்சிப்
கெய்ரோ: உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா முன்னேறியுள்ளார்.
joshna
இப்போட்டியில் ஹாங்காங் வீராங்கனை காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். அப்போது ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-4 என முன்னிலை வகித்ததால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு ஜோஷ்னா தகுதிபெற்றார்.
உலகின் 12ஆவது நிலை வீராங்கனையான ஜோஷ்னா அடுத்த போட்டியில் இரண்டாவது நிலை வீராங்கனையான எகிப்தைச் சேர்ந்த நூர் எல் செர்பினியை எதிர்கொள்கிறார்.