பி.எஸ்.ஏ. உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் எகிப்தில் நடைபெற்றுவருகின்றன. இதில் இந்தியா சார்பில் களமிறங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எகிப்தின் நூர் எல் ஷெர்பினியை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஷெர்பினி, முதல் செட்டை 11-05 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோஷ்னாவிற்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிவந்த ஷெர்பினி, ஜோஷ்னாவின் வெற்றிக் கனவை உடைத்தார்.