தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மல்யுத்த வீராங்கனை சந்தேகமான முறையில் மரணம்! - தொழில்முறை மல்யுத்த வீராங்கனை

ஜப்பானிய தொழில்முறை மல்யுத்த வீராங்கனை ஹனா கிமுரா(Hana Kimura) சந்தேகமான முறையில் தனது வீட்டு மாடியில் சடலமாக கிடத்துள்ளார். இதையடுத்து, வீராங்கனையின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Japanese pro wrestler Hana Kimura dies aged 22
Japanese pro wrestler Hana Kimura dies aged 22

By

Published : May 24, 2020, 2:57 PM IST

ஜப்பான் நாட்டின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனையாக வலம் வந்தவர் ஹனா கிமுரா. இவர் பிரபல ஆன்லைன் ஊடகம் வாயிலாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே 22 வயதே ஆன கிமுரா, சில தினங்களாக தனது சமூக வலைதளங்களில் எண்ணற்ற பதிவுகளை பகிர்ந்து வந்தார். மேலும், நேற்று (மே 23) இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீ நிறைய காலம் வாழவேண்டும், என்னை மன்னித்துவிடு, நீ உனது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்’ என பதிவிட்டிருந்தார்.

ஹனா கிமுரா கடைசியாக பதிவிட்ட ட்விட்டர் புகைப்படம்

இதையடுத்து, இன்று காலை ஹனா கிமுரா சந்தேகமான முறையில் அவரது வீட்டு மாடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கிமுராவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கிமுராவின் இறப்பு செய்தியறிந்த உலக பொழுதுபோக்கு குத்துச்சண்டை(WWE) நட்சத்திரங்கள் பெய்ஜ், மிக் ஃபோலே, லானா உள்ளிட்டோர் ட்விட்டர் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஐபிஎல் பற்றி அரசுதான் முடிவு செய்யும்: கிரண் ரிஜிஜு...!

ABOUT THE AUTHOR

...view details