கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பாக டோக்கியோவில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டு தொடரும் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
'டோக்கியோ ஒலிம்பிக் குறித்து ஜப்பான் பரிசீலித்து வருகிறது' - கொய்க் யூரிகோ - ஒலிம்பிக் தொடர் ஒத்திவைப்பு
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கு படுத்துவதற்கு ஜப்பான் பரிசீலித்து வருவதாக டோக்கியோ கவர்னர் கொய்க் யூரிகோ தெரிவித்துள்ளார்.
!['டோக்கியோ ஒலிம்பிக் குறித்து ஜப்பான் பரிசீலித்து வருகிறது' - கொய்க் யூரிகோ Japan considering ways to streamline Tokyo Olympics to curb virus spread](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:17-japan-0406newsroom-1591267656-110.jpg)
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் குறித்து ஜப்பான் பரிசீலித்து வருவதாக டோக்கியோ கவர்னர் கொய்க் யூரிகோ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'ஜப்பான் மற்றும் டோக்கியோ மக்கள் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளுக்கு தங்களது ஆதரவை தரவேண்டும். மேலும், ஒலிம்பிக் போட்டிகள் குறித்தான மக்களின் ஆதரவுகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
ஏனெனில் பாதுகாப்பான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது மிக முக்கியம். இதனால் அரசாங்கம் மற்றும் ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவினருடன் இணைந்து நாங்கள் இதைச்செய்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.