பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்களான அபிஷேக் வெர்மா, சௌரப் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அபிஷேக் 244 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
#issfwcrio2019: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்! - ரியோ டி ஜெனிரோ
பிரசிலியா: ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கமும் வெண்கலமும் வென்றுள்ளனர்.

issfwcrio2019
அதேபோல் சௌரப் சவுத்ரி 221 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். பெண்கள் பிரிவில் இளவேனில் வாலறிவன் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றதைத் தொடர்ந்து நம் வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Last Updated : Aug 30, 2019, 12:09 PM IST