கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் (Kerala Blasters) அணி ஹைதராபாத் அணியிடம் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்தது.
இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இந்நிலையில் ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் கேரளமும், 88ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் வீரரும் ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் இருந்தது.
கோல்டன் ஷூ விருதுடன் பார்ட் ஓக்பெச்சே (Bart Ogbeche) ஹைதராபாத்.
இதையடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் ஆட்டத்துக்கு அளிக்கப்பட்டது. அப்போதும் யாரும் கோல் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் ஹைதராபாத் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை தோற்கடித்தது. இந்தத் தொடரில் 18 கோல்கள் அடித்த ஹைதராபாத் வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ வழங்கப்பட்டது.
தங்க கையுறை (கோல்டன் க்ளவுஸ்) விருது பெற்ற கேரளத்தின் கோல்கீப்பர் சுகன் கில்.
முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில் அரையிறுதியில், ஹைதராபாத் அணி 3-2 என்ற கணக்கில் ATK மோகுன் பாகனை (ATK Mohun Bagan) தோற்கடித்தது.
கேரளம், ஜாம்ஷெட்பூரை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : களத்தில் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை; என்ன ஆச்சு அவருக்கு?