ஜப்பானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து அணி சமோவா அணியை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 47-05 என்ற புள்ளிக்கணக்கில் சமோவா அணியை வீழ்த்தி உலகக்கோப்பை ரக்பி தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.