தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'அடுத்த வருடமும் ஒலிம்பிக் நடக்கவில்லை என்றால் ரத்து செய்யப்படும்' - IOC president Bach

டோக்கியோ: கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் தொடர், அடுத்த ஆண்டும் நடைபெறவில்லை என்றால் ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.

ioc-president-bach-accepts-games-would-be-cancelled-if-not-held-in-2021
ioc-president-bach-accepts-games-would-be-cancelled-if-not-held-in-2021

By

Published : May 22, 2020, 10:38 AM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்னதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் டொஷிரோ மோட்டோ பேசுகையில், ''கரோனா வைரசைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரை பார்வையாளர்களின்றி நடத்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை'' என்றார்.

இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''வெளிப்படையாகப் பேச வேண்டுமென்றால் ஒருங்கிணைப்புக் குழுவில் மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் பேரை பணியமர்த்த முடியாது. அதேபோல் கரோனா வைரஸ் காரணமாக இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் தொடர், அடுத்த வருடமும் நடைபெறவில்லை என்றால் முழுமையாக ரத்து செய்யப்படும். மீண்டும் ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்பட்டால், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய ஒலிம்பிக் தொடர்களுக்குப் பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் உள்ளன

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச்

விளையாட்டு வீரர்களின் நேரம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், உலகின் உள்ள அனைத்து விளையாட்டுக் கூட்டமைப்பிற்கும் ஒரு திட்டம் இருக்கும். அதனை அவர்களால் ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொள்ள முடியாது'' என்றார். மேலும் பார்வையாளர்களின்றி ஒலிம்பிக் தொடர் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு தாமஸ் பேச் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க:ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வருந்தும் கோலி!

ABOUT THE AUTHOR

...view details