பிப்ரவரி மாதம் டெல்லியில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. புல்வாமா தாக்குதலால் இந்தப் போட்டிகளில் பங்கேற்க வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு நுழைவுஇசைவு (விசா) மறுக்கப்பட்டது. இதனால் சர்வதேச அரங்கில் கடும் கண்டனங்களை பெற்றது இந்தியா. மேலும் எந்த விதமான சர்வதேச போட்டிகளையும் இந்தியா நடத்தக் கூடாது என்ற தடையையும் சர்வதேச ஒலிம்பிக் குழு விதித்து. இதனால் கடந்த ஐந்து மாதங்களாக எந்த ஒரு சர்வதேச விளையாட்டுத் தொடரும் இந்தியாவில் நடைபெறவில்லை.
இந்தியாவுக்கான சர்வதேச தடை நீக்கம்! - olympics
சர்வதேச போட்டிகளை நடத்த இந்தியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நீக்கியுள்ளது.
இந்தியாவின் சர்வதேச தடை நீக்கம்...
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிபெற்ற அனைத்து நாட்டு வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என ஜூன் 18ஆம் தேதி இந்தியா உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு சர்வதேச போட்டிகளை நடத்த விதித்திருந்த தடையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நேற்று நீக்கியது.
இதற்காக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு நன்றி தெரிவித்துள்ளார்.