சர்வதேச ஒலிம்பிக் தினம் ஜூன் 23ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒலிம்பிக் தின கொண்டாட்டம் பற்றி ஏற்கனவே நிர்வாகக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். பல்வேறு தரப்பிலும் இந்த நாளினைக் கொண்டாடுவோம்.
கரோனா வைரசால் வீடுகளில் இருந்தாலும், ஒலிம்பிக் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட பல வழிகள் உள்ளன. உடற்பயிற்சிகள் மூலம் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதேபோல் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அரசு விதிகளை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.