இந்திய-சீன எல்லைகளான கிழக்கு லடாக் பகுதியில், கடந்த சில தினங்களாக பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது இந்தியாவில் சீனாவிற்கு எதிரான மனநிலையை நோக்கி நகர்த்தியுள்ளது. இந்தியாவில் சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்துவருகின்றனர்.
சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் ரத்து? - சீன தயாரிப்புகள் புறக்கணிப்பு
சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் ரத்துசெய்வது குறித்து அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொருளாளர் ஆனந்தேஸ்வர் பாண்டே தெரிவித்துள்ளார்.
IOA to discuss cutting ties with Chinese sponsors in next executive committee meeting
இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொருளாளர் ஆனந்தேஸ்வர் பாண்டே கூறுகையில், “சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் ரத்துசெய்வது குறித்து அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முடிவெடுக்கும். இது தனிப்பட்ட ஒருவர் எடுக்கும் முடிவல்ல. செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களும் ஆலோசித்து எடுக்க வேண்டிய முக்கிய முடிவாகும்” என்றார்.