தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாட ஐஓஏ தலைவர் வேண்டுகோள்! - ஐ ஓ ஏ தலைவர் நரிந்தர் பத்ரா

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் பாத்ரா, வருகிற ஜூன் 23 ஆம் தேதியன்று உலக ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாடும்படி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ioa-chief-batra-urges-country-to-celebrate-olympic-day-on-june-23
ioa-chief-batra-urges-country-to-celebrate-olympic-day-on-june-23

By

Published : Jun 22, 2020, 4:04 AM IST

வருடந்தோறும் ஜூன் 23ஆம் தேதியன்று, சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் பாத்ரா, வருகிற ஜூன் 23ஆம் தேதி உலக ஒலிம்பிக் தினத்தை இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பத்ரா, "ஒரு விளையாட்டைப் பார்க்கும் நாட்டிலிருந்து, மிகவும் சுறுசுறுப்பான விளையாட்டில் பங்கேற்கும் தேசத்திற்கு பயணம் மேற்கொள்வதென்பது, ஒலிம்பிக் சமூகத்தைச் சுற்றியுள்ள மக்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு விளையாட்டையும் விளையாட ஊக்கமளிக்கும்.

அதேசமயம் தகுந்த இடைவெளி கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட, இந்தத் தினத்தைக் கொண்டாட எண்ணற்ற வழிகள் உள்ளன. இது நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஒருவித உடல் பயிற்சியாகக்கூட இருக்கலாம். மேலும் இது ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும் ஒரு வழியாகவும் அமையலாம்.

இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களும் இணைந்து இவ்விழாவிற்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details