இந்திய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனது சமீபகால சாதனைகள் காரணமக இந்திய விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டிபிசிலி கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் 65 கிலோ எடைப் பிரிவில் ஈரானின் பிபியாணியை வீழ்த்தி புனியா இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை வென்று வந்தார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்தவர்.
ஆசிய விளையட்டில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா இது குறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், புனியா சமீபத்தில் நாட்டிற்காக செய்த சாதனைகள் காரணமாக அவரின் பெயர் 12 பேர் கொண்ட ராஜிவ் கேல் ரத்னா விருது பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இவர் ஆசிய விளையட்டு மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவிற்காக தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் கேல் ரத்னா விருதைப் பெற்றனர்.