கரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகாவே தற்போதைய தேவையாக உள்ளது: கிரண் ரிஜிஜு - சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யோகாவே தற்போதைய சூழலில் அதிகமான தேவையாக உள்ளது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதனையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது வீடுகளில் யோகாசனங்கள் செய்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் யோகா செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ''இந்தியாவின் பெருமைகளில் யோகா முக்கியமானது. அதனை சர்வதேச யோகா தினமாக உலகமே கொண்டாட பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஐநா மூலம் உலகமே கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கரோனா வைரஸ் சூழலில் யோகாவே தற்போதைய முக்கிய தேவையாகவும் உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.