தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி தொடக்கம் - தகுதி சுற்று ஆட்டம்

சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன.

சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி... தகுதி சுற்று ஆட்டம் தொடக்கம்...
சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி... தகுதி சுற்று ஆட்டம் தொடக்கம்...

By

Published : Sep 10, 2022, 12:12 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் ஓபன் டபிள்யு. டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. இதன் தகுதி சுற்று போட்டிகள் இன்றும் நாளையும் நடக்கிறது. சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என்று இரண்டு பிரிவுகளிலும் இந்தியா, அமெரிக்கா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் உட்பட 54 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இன்றைய போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 29ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை அலிஸன் ரிஸ்கே அமிர்தராஜ், பெல்ஜியம் வீராங்கனை எல்ஸி மெர்டன்ஸ், பிரான்ஸ் இளம் வீராங்கனை கரோலின் கார்ஸியா களமிறங்க உள்ளனர்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்காத நிலையில் இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா, கர்மன் தாண்டி உட்பட 5 வீராங்கனைகள் தகுதிச்சுற்றில் விளையாடவுள்ளனர்.

சர்வதேச டென்னிஸ் போட்டியில் மொத்தம் 32 வீரர்கள் களம் இறங்க உள்ளனர். இதில் 21 வீரர்கள் டாப் 100 ரேங்க் பட்டியலில் இருந்தும், 4 வீராங்கனைகள் வைல்ட் கார்ட் மூலம் தேர்வு செய்யப்பட்டு விட்ட நிலையில் இன்றும் நாளையும் நடைபெறும் தகுதி சுற்று மூலம் 6 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதையும் படிங்க:ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆரோன் பின்ச் ஓய்வு

ABOUT THE AUTHOR

...view details