சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான சதுரங்க போட்டிகளை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் சகுந்தலா மற்றும் வேலூர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் இணைந்து தொடங்கி வைத்தனர்.
பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி தொடக்கம்! - பெரியார் பல்கலைகழகம்
தருமபுரி: சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் தொடங்கியது.
சதுரங்கம் விளையாடும் கல்லூரி மாணவிகள்
இந்தப் போட்டியில் 35 கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இன்று தொடங்கியிருக்கும் போட்டிகள் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.