டேவிட் பெக்காம் என்றதும் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்தான் அனைவருக்கும் நினைவில் வருவார். ஆனால் இந்த டேவிட் பெக்காம் இந்தியாவின் அந்தமான் தீவைச் சேர்ந்தவர். 17 வயதே நிரம்பியுள்ள டேவிட் பெக்காம், தனது அசாத்திய திறமைகளால் கவுகாத்தியில் நடக்கும் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இவர் ஒரு சைக்கிளிங் வீரர். டேவிட் பெக்காம் என்ற பெயர் குறித்து அவரிடம் பேசுகையில், '' எனது குடும்பத்தினர் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் மிகத் தீவிர ரசிகர்கள். நான் பிறந்தவுடனேயே எனக்கு டேவிட் பெக்காம் பெயரினை வைத்துவிட்டார்கள். இப்போது நானும் டேவிட் பெக்காம் ரசிகன்தான். நானும் கால்பந்து விளையாடுவேன். சுக்ரடோ கால்பந்து தொடரில் விளையாடியுள்ளேன். ஆனால் நான் சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்பதற்கு எனது தாத்தாதான் காரணம்'' என்றார்.
டேவிட் பெக்காம் 2017ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.