கெய்ரோ:எகிப்து தலைநகர் கெய்ரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 60 நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 20 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிர் கூட்டணி தங்கம் வென்று அசத்தல்
ஐஎஸ்எஸ்எஃப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்திய மகளிா் கூட்டணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
முன்னதாக நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். இதே போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா வீராங்கனை இஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து இன்று(மார்ச்.3) பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கூட்டணி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீ நிவேதா, இஷா சிங், ருச்சிதா வினர்கர் ஆகியோர் அடங்கிய கூட்டணி 574 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தியது.
இதையும் படிங்க:உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்... இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தல்...