இந்தியாவின் நட்சத்திர கார் பந்தயகாரரும், முதல் பந்தய கார் ஓட்டுநருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன், நேற்று ஜப்பானில் நடைபெற்ற சூப்பர் ஜீடி எக்ஸ் டிடீஎம் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார்.
இந்த பந்தயத்தில் உலகம் முழுவதும் இருந்து 21 பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பந்தயத்தில் பந்தயத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நகஜிமா ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஜிடியை ஓட்டிய கார்த்திகேயன் வறண்ட மற்றும் ஈரமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டார்.