தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: வெள்ளிப்பதக்கத்தை வென்றது இந்திய மகளிர் அணி! - கிருத்தி குப்தா

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Indian women's trap team settle for sliver in Shotgun World Cup
Indian women's trap team settle for sliver in Shotgun World Cup

By

Published : Mar 5, 2021, 9:57 AM IST

நடப்பு ஆண்டிற்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் குழுக்களுக்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் கீர்த்தி குப்தா, மனிஷா கீர், ராஜேஷ்வரி குமாரி குழுவினர் ரஷ்ய அணியுடன் மோதினர்.

இந்தப் போட்டியில் ரஷ்யா அணி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. இத்தோல்வியின் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை தன்வசப்படுத்தியது.

இந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அச்சுறுத்தும் கரோனா - பிஎஸ்எல் தொடர் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details