தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

4×400 தொடர் ஓட்டப்போட்டியில் வெள்ளி வென்ற இந்தியப் பெண்கள்!

தோகா: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 4×400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா பெண்கள் அணி வெள்ளி வென்று அசத்தியுள்ளது.

தோகா

By

Published : Apr 26, 2019, 11:01 AM IST

Updated : Apr 26, 2019, 11:36 AM IST

23ஆவது ஆசிய தடகள் சாம்பியன்ஷிப் தொடர் தோகாவில் நடைபெற்றது. இதில் 4×400 தொடர் ஓட்டப்பந்தயத்தின் பெண்கள் பிரிவில் ப்ரச்சி, பூவம்மா, சரிதா, விஸ்மயா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 32.22 வினாடிகளில் கடந்து இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். இதில் 3 நிமிடங்கள் 32.10 வினாடிகள் வந்த பக்ரைன் அணி தங்கப்பதக்கத்தையும், 3 நிமிடங்கள் 34 வினாடிகளில் வந்த ஜப்பான் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

மேலும், கலப்பு 4×400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பாக தமிழ்நாடு வீரர் ஆரோக்ய ராஜ் உட்பட முகமது அனஸ், பூவம்மா, விஸ்வமய்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த அணி பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 16 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

நான்கு நாட்கள் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஆசிய தடகள தொடரின் முதல் இடத்தில் 11 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களுடன் பஹ்ரைன் பிடித்தது.

கலப்பு 4×400 தொடர் ஓட்டப்பந்தய அணி

முதல் ஐந்து இடங்கள் பிடித்த நாடுகளின் பட்டியல்:

நாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
பஹ்ரைன் 11 7 4 22
சீனா 9 13 7 29
ஜப்பான் 5 4 9 18
இந்தியா 3 7 7 17
உஸ்பெகிஸ்தான் 3 0 2 5
Last Updated : Apr 26, 2019, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details