கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் சர்வதேச போட்டி அசாமில் நடைபெற்றது. இதில் இன்று (டிச.10) நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய ஜோடியான தனிஷா க்ராஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா - சீனதைபே ஜோடியான சுங் ஷுயோ யுன் மற்றும் யூ சியென் ஹுய்யை எதிர்கொண்டனர்.
40 நிமிடம் நடைபெற்ற இப்போட்டியில் சீனதைபே ஜோடியை 21-13, 21-19 என்ற கணக்கில் இந்திய ஜோடியான தனிஷா க்ராஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா வீழ்த்தினர். இதன் மூலம் அவர்கள் தங்களது 2வது சூப்பர் 100 பட்டத்தை உறுதி செய்தனர்.
இந்த ஆண்டு கிடைத்த மூன்றாவது பட்டம் ஆகும். முன்னதாக இந்த ஆண்டில் அபு தாபி மாஸ்டர்ஸ் மற்றும் நான்டெஸ் இண்டர்நேஷ்னல் சேலஞ் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஷ்வினி - தனிஷா ஜோடி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் சேர்ந்து விளையாடத் தொடங்கினர். மேலும், அக்டோபர் - செப்டம்பர் மாதங்களில் சீனாவில் நடைபெற்ற இந்தியன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பகுதியாக இருந்தனர்.
இந்தியாவின் தலைசிறந்த இரட்டையர் ஜோடியில் ஒருவரான அஷ்வினி, ஜ்வாலா குட்டாவுடன் சேர்ந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் மற்றும் 2010, 2014ல் நடைபெற்ற காமென்வெல்த் விளையாட்டுகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர்.
2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அஷ்வினி - என் சிக்கி ரெட்டியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமென்வெல்த் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்த ஜோடி கடந்த ஆண்டு வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இரட்டையர் பிரிவின் ஜோடியான தனிஷா, கடந்த 2016ஆம் ஆண்டு பஹ்ரைனை பிரநிதிப்படுத்தி விளையாடினார். தனது முதல் பேட்மிண்டன் வேல்ர்ட் ஃபெடரேஷன் பட்டமாக, பஹ்ரைன் இண்டர்நேஷ்னல் சேலஞ்சை வென்றார். அதன்பின் 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். அதன்பின் கோவைவை பிரதிநிதிப்படுத்தி உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி..!