தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#WorldAthleticsChampionship: போங்கு ஆட்டத்தை எதிர்த்து போராடியதால் பைனலுக்குச் சென்ற இந்திய வீரர் - Avinash Sable

தோஹாவில் நடைபெற்றுவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 3000 மீ  ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயப் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் அவினாஷ் சாப்லே தகுதிபெற்றார்.

Avinash Sable

By

Published : Oct 2, 2019, 3:22 PM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தோஹாவில் நடைபெற்றுவருகின்றன. இதில், ஆடவருக்கான 3000 மீ ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தய போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே பங்கேற்றார்.

இப்போட்டியின்போது எத்தியோபியா தடகள வீரர் நிகாட்டே (Nigatte) இரண்டுமுறை அவினாஷ் சாப்லேவின் ஆட்டத்தை குறுக்கேப் புகுந்து தடுத்தார். இதனால், ஏற்பட்ட தாமதத்தால் அவினாஷ் பந்தைய இலக்கை எட்டு நிமிடம் 25 விநாடி, 23 மணித்துளிகளில் கடந்து ஏழாவது இடத்தை பிடித்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதலில் இழந்தார்.

பின் இந்திய தடகள சம்மேளனம் அவினேஷின் ஆட்டத்தை எத்தியோபிய வீரர் தடுத்து நிறுத்தியது குறித்து சர்வதேச தடகள சமமேளனத்திடம் முறையிட்டது. இதனால், இந்திய தடகள சம்மேளனத்திற்கு சாதகமாக ஐ.ஏ.ஏ.எஃப் (சர்வதேச தடகள சம்மேளனம்) தீர்ப்பு வழங்கியதால், அவினாஷ் சாப்லே இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதனிடையே, இவர் இப்போட்டியின்மூலம் தனது தேசிய அளவிலான சாதனையை (8:28.94) முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details