தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ சென்றடைந்த இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி! - டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்தடைந்தது.

இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி
இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி

By

Published : Jul 17, 2021, 5:12 PM IST

டோக்கியோ (ஜப்பான்): வரும் ஜூலை 23ஆம் தேதிமுதல் ஆகஸ்ட 8ஆம் தேதிவரை ஒலிம்பிக் தொடர் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி இன்று (ஜூலை 17) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. இந்தத் தகவலை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புத் தலைவர் நரிந்தர் பாத்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள், இந்தாண்டு மே மாதம் முதல் குரேஷியாவில் பயிற்சிப் பெற்றுவந்தனர். மேலும், அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக்கோப்பைத் தொடரிலும் பங்கேற்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன் ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக்கோப்பைத் தொடர் நடைபெற இருந்ததால், அத்தொடரில் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஐ.எஸ்.எஸ்.எஃப். தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களைப் பெற்று 10ஆவது இடத்தைத்தான் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் கிராமத்தில் கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details