இந்தியன் ப்ரீமியர் லீக் (கிரிக்கெட்), இந்தியன் சூப்பர் லீக் (கால்பந்து) போன்று மற்ற விளையாட்டுப் போட்டிகளும் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன், டேபிள்டென்னிஸ், கபடி, மல்யுத்தம் ஆகிய போட்டிகளின் வரிசையில் தற்போது குத்துச்சண்டை போட்டியும் இணைந்துள்ளது.
குத்துச்சண்டை வீரர்களுக்காக ஒலிம்பிக் ஸ்டைலில் இந்தியன் பாக்ஸிங் லீக் தொடரின் முதல் சீசன் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் 21ஆம் தேதிவரை டெல்லியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில், ஒலிம்பிக், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் தங்கப் பதக்கம் வென்றவர்களுடன் இந்தியாவின் நட்சத்திரங்களான மேரி கோம், அமித் பங்கல், மனோஷ் குமார், சோனியா லேதர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தத் தொடரை ப்ரோ ரெஸ்ட்லிங் லீக், ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் ஆகிய இரு நிறுவனங்களின் (ப்ரோ ஸ்போர்டிஃபை, ஸ்போர்ட்ஸ்லைவ்) நிர்வாகிகள் ஆகியோர் இந்தத் தொடரை ஆசிய அளவில் பிரமாண்டமாக நடத்தவுள்ளனர். ஆறு அணிகள் பங்கேற்று விளையாடும் இந்தத் தொடரின் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதையும் படிங்க:மேரி கோமுடன் மோதும் நிஹத் ஸரீன் - டோக்கியோ ஒலிம்பிக்கில் என்ட்ரி தரப்போவது யார்?